தொடர்புடைய செய்திகள்
- ஒரே படத்துக்கு இசையமைக்கும் தமன் & தேவி ஸ்ரீ பிரசாத்!
- நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு!
- வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்… அட இவங்களும் இருக்காங்களா?
- சீனாவில் இருந்து வந்த 3600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் !
- பயம்தான் காப்பாற்றும் என்றால் பயப்படுங்கள்… கொரோனா குறித்து அஸ்வின் கருத்து!
3 லட்சத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,81,386 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,49,65,463 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 4,106 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,74,390 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,11,74,076 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 35,16,997 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 18,29,26,460 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
