சீனாவில் இருந்து வந்த 3600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் !
சீனாவில் இருந்து 3600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஹாங்சோவ் விமான நிலையத்தில் இருந்து போயிங் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரபட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாநிலங்கள் தயாரிக்கும் ஆக்ஸிஜனை மத்திய அரசு பெற்று பகிர்ந்தளித்து வருகிறது.
இதைத்தவிர்த்து, ஆக்சிஜன் தட்டுபாட்டை போக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டுகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய உத்தரவிட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான ஒற்றை டெலிவரி நேற்று சீனாவில் இருந்து வந்து சேர்ந்தது. சுமார் 100 டன்கள் எடை கொண்ட செறிவூட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் விமான நிலையத்தில் இருந்து போயிங் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரபட்டுள்ளது.