வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 17 மே 2021 (07:42 IST)

இந்தியாவில் குறைகிறது கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 2.81 லட்சம் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது 
 
கடந்த 24 மணி நேரத்தில் 2,81,860 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,49,64,925. என்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,11,67,609.  என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருந்தாலும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் 4,092 பேர் உயிரிழந்தனர் என்றும் கொரோனாவால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,74,411. என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்தியாவில் தற்போது 2,74,411. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2,74,411 என்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 34,389, பேர்களும், தமிழகத்தில் 33,181 பேர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது