1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Pankaj Parakh - Guinness record

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பங்கஜ் பராக்

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பங்கஜ் பராக்

பங்கஜ் பராக்
மகாராஷ்டிரா  தொழில் அதிபரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகருமான பங்கஜ் பராக்  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
 

 
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரியும், தேசியவாத கங்கிரஸ் கட்சி பிரமுகருமான பங்கஜ் பராக்,  ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் 7 கிலோ எடையில் தயாரிக்கப் பட்ட தங்கச் சட்டை அணிந்து வந்திருந்தார். இதன் மதிப்பு ரூ. 3 கோடி எனக் கூறப்படுகிறது. 
 
பங்கஜ் பராக்கின் தங்க சட்டையைக் கண்ட திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், ஆச்சர்யத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் செல்பியும் எடுத்தனர்.
 
இந்த நிலையில், ரூ.98,35,099 செலவில், உலகின் மிக விலை உயர்ந்த தங்கச் சட்டை அணிந்தவர் என்று அவருக்கு கின்னஸ் உலக சாதனை புத்தகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
 
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பங்கஜ் தற்போது, நாசிக் மாவட்டம், இயோலா நகர துணை மேயராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

 
About Writer
K.N.Vadivel
அடுத்த கட்டுரையில்
மே 5 ஆம் தேதி வணிகர் தினம் - கடைகள் விடுமுறை