திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2023 (09:07 IST)

நாளை முதல் பான் கார்டு செல்லாது.. இன்றுக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்..!

பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே பலமுறை வலியுறுத்திய நிலையில் இன்றுடன் பான் - ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்றும் இன்று இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பான் எண் வாங்கியவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமானவரி துறை தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதற்கான காலக்கெடுக்கப்பட்ட நிலையில் பான் ஆதார் எண்களை இணைப்பதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்றுக்குள் ஒருவேளை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் நாளை முதல் பான் எண் செல்லாது ஆகிவிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
 எனவே பான் எண் இல்லாமல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது
 
Edited by Siva