வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (16:09 IST)

பான் - ஆதார் இணைப்புக்கு ஜூன் 30 கடைசி நாள்: வருமான வரித்துறை எச்சரிக்கை..!

பான் - ஆதார் இணைப்புக்கு ஜூன் 30 கடைசி நாள் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 30.06.2023 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். இன்றே உங்கள் பான் & ஆதாரை இணைக்க வேண்டும்.
 
குறிப்பிட்ட தேதிக்குள் தங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படாவிட்டால் வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் தண்டனை நடவடிக்கைகளையும் அதனுடன் உள்ள அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், பான் எண் செயலிழந்துவிடும். இதனால் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) மற்றும் வசூலிக்கப்படும் வரி (டிசிஎஸ்) ஆகிய இரண்டும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதிக விகிதத்தில் கழிக்கப்படும் அல்லது சேகரிக்கப்படும்.
 
நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் அத்தகைய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வட்டி ஆகியவையும் வழங்கப்படாது. இதுமட்டுமல்லாது பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மேலும் அபராதம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிய வந்துள்ளது. ஆதாருடன் இணைக்காமல் பான் எண்ணை பயன்படுத்தும் போது ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் தாமதிக்காது உடனடியாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும்.
 
Edited by Mahendran