செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2023 (15:20 IST)

தமிழக பாஜகவிற்கு மேலும் ஊக்கமளிக்கும்: மைத்ரேயன் இணைப்பு குறித்து அண்ணாமலை..!

அதிமுக முன்னாள் எம்பி பாஜகவில் இணைந்துள்ளது பாஜகவிற்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவின் முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் திடீரென இன்று பாஜகவில் இணைந்து கொண்டார். அவர் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் இணைந்து கொண்டதை அடுத்து அவரை பாஜகவின் முன்னணி தலைவர்கள் வரவேற்றனர்.
 
இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதாவது: மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் கரத்தினை வலுப்படுத்த, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் திரு சிடி ரவி அவர்களது முன்னிலையில் நமது கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் திரு 
மைத்ரேயன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
 
டாக்டர் திரு மைத்ரேயன் அவர்களது அரசியல் அனுபவமும், தொடர்ந்த மக்கள் பணியும், தமிழக பாஜகவிற்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva