புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (19:57 IST)

உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தானை அழிக்க வேண்டும்: சிவசேனா

உலகில் தீவிரவாதம் இன்றி அமைதியாக அனைவரும் வாழ வேண்டும் என்றால் உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் அழிய வேண்டும் என்று சிவசேனா பத்திரிகை கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது
 
சிவசேனா பத்திரிகை சாம்னாவில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், பாகிஸ்தானில் கலாச்சார மையங்கள் என்ற போர்வையில் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும், அந்த தீவிரவாதிகளை அழிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆதரவு கொடுத்து வருவதாகவும் தங்கள் மண்ணில் தீவிரவாதிகளே என்று கூறி வருவதாகவும் அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
எனவே உலக வரைப்படத்தில் பாகிஸ்தான் இருக்கும் வரை அமைதி ஏற்பட வாய்ப்பு இல்லை இல்லை என்றும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி  உலக நாடுகள் அனைத்திற்கும் ஆபத்தானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் இந்தியா போன்று பாகிஸ்தானில் ஜனநாயம் கிடையாது என்றும், பிரதமர் மற்றும் அதிபர் என அந்நாட்டில் இருந்தாலும் அந்நாட்டை உண்மையில் ஆட்சி செய்வது ராணுவம் தான் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.