வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் வெளியே செல்லவே சிரமப்பட்டு வருகின்றனர். சமீபமாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சி அளித்து வருகிறது.
அந்த வகையில் இன்றும் 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பான அளவிலோ அல்லது சற்று அதிகமாகவோ நிலவும் என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K