திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (17:30 IST)

ஒருவேளைப் போர் வந்தால் – மக்களுக்கு தைரியம் சொல்லும் பாகிஸ்தான் !

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் நடந்து வரும் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

இந்தத் தொடர் தாக்குதல்களால் இந்தியா – பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. இரு நாடுகளிலும் சிலப் பகுதிகளில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நாட்டு மக்களுக்கு போர் நடந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைஸல் தனது டிவிட்டரில் பதற்றத்தை ஊக்குவிக்கும் விதமாகக் கருத்து ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். அதில் போர் பற்றிய முகமது நபி அவர்களின் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.

உங்களின் எதிரியுடன் போரிட வேண்டும்
என்று விரும்பாதீர்கள்.
அல்லாவிடம் இருந்து
மன்னிப்பைக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால் போருக்கான சூழல் வந்தால்,
தைரியமாக இருங்கள்.
வாள்களின் நிழலுக்கடியில்
சொர்க்கம் இருப்பதை உணருங்கள்.

இதன் மூலம் போர் வந்தால் அதற்காக அஞ்சாமல் தைரியமாக இருங்கள் என்று மக்களிடம் கூறும் விதமாக அவர் கருத்து தெரிவித்துள்ளதால் மக்கள் மனதில் போர் பற்றிய அச்சம் இன்னும் அதிகமாகியுள்ளது.