கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி தேர்வில் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இரண்டு கேள்விகளை தயாரித்த பேராசிரியருக்கு, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் நடந்த கல்லூரி தேர்வில், "ஆர்எஸ்எஸ் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது?" என்ற கேள்விக்கு பதிலாக, "மத ரீதியில்" மற்றும் "ஜாதி ரீதியில்" என இரண்டு விருப்புகள் கொடுக்கப்பட்டு, அவற்றில் ஒன்றை தேர்வு செய்யும் வகையில் கேள்வி அமைக்கப்பட்டிருந்தது.
அதேபோல், ஆர்எஸ்எஸ் அமைப்பை நக்சலைட்டுகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை அமைப்புகளுடன் இணைத்தும் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு கேள்விகளும் கடும் கண்டனங்களை ஏற்படுத்திய நிலையில், இந்த கேள்விகளை தயாரித்த பேராசிரியரான பன்வார் என்பவருக்கு, வினாத்தாள் தயாரிக்கும் பணியும் விடைத்தாள் திருத்தும் பணியும் மேற்கொள்ள, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva