புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (18:07 IST)

இந்தியா - பாகிஸ்தான் மோதல்: நிலைமை கைமீறினால் நானோ மோடியோ கூட கட்டுப்படுத்த முடியாது - இம்ரான் கான்

தப்புக் கணக்குப் போடுவதால் ஏற்படும் ஆபத்து அதிகம். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆயுதங்கள் உள்ள நாடுகளில், பதற்ற நிலை அதிகரித்தால், நிலைமை கையை மீறிப் போகும். நானோ, மோதியோ கூட அந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, உட்கார்ந்து பேசுவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார் இம்ரான்.
எனவே, இனிமேலாவது கொஞ்சம் நடைமுறை அறிவுடன், ஞானத்துடன் நடந்துகொள்வோம். நம்மிடம் இந்திய விமானிகள் உள்ளனர். ஆனால், இங்கிருந்து நாம் எங்கே செல்லப்போகிறோம் என்பதுதான் முக்கியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தொலைபேசி மூலம் அவர் ஆற்றிய உரையில், "புல்வாமா தாக்குதல் பற்றிய புலன் விசாரணையை நடத்துவதற்கு எங்களால் ஆன எல்லா ஒத்துழைப்பையும் அளித்தோம்" என்று கூறினார்.
 
அத்துடன், "நேற்றுமுதல் இந்தப் பிராந்தியத்தில் நடந்த நிகழ்வு குறித்து தேசத்தின் நம்பிக்கையைப் பெற விரும்பினேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
புதன்கிழமை இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதைப் பற்றி குறிப்பிட்ட அவர், தங்களால் பதிலடி தர முடியும் என்பதை இந்தியாவுக்குக் காட்டவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறினார். அத்துடன், "நாங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், உயிரிழப்போ பாதிப்புகளோ ஏற்படாமல் பார்த்துக்கொண்டோம். இறையாண்மையுள்ள எந்த நாடும் மற்றொரு நாடு நீதிபதியாகவும், தண்டனை அளிப்போராகவும் மாறுவதை அனுமதிக்க முடியாது. அதனால்தான், அத்துமீறல் நடந்தால் பதிலடி தருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று இந்தியாவிடம் வலியுறுத்தினோம்." என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.