புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (19:38 IST)

முப்படை தளபதிகளுடன் பிரதமர் திடீர் ஆலோசனை: அடுத்த தாக்குதலா?

முப்படை தளபதிகளுடன் இன்று காலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து முக்கிய ஆலோசனை செய்த நிலையில் பிரதமர் மோடி இன்று இரண்டு முறை முப்படை தளபதிகளுடன் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எனவே பாகிஸ்தான் மீது அடுத்த தாக்குதல் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்த நிலையில் பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இந்திய விமானப்படை பாகிஸ்தான் ராணுவத்தையோ மக்களையோ தாக்கவில்லை. தீவிரவாதிகளின் முகாம்களை மட்டும் அழித்துவிட்டு திரும்பியது. ஆனால் பாகிஸ்தானோ, இந்திய ராணுவத்தை தாக்க முயற்சிப்பதால் மீண்டும் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மாற்றி மாற்றி முப்படை தளபதிகளை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இப்போதைய நிலை என டெல்லி வட்டாரங்கல் கூறுகின்றன