அடுத்த 72 மணி நேரத்தில் வெடிக்கும் போர்: பாக். அமைச்சர் வார்னிங்

Last Updated: புதன், 27 பிப்ரவரி 2019 (16:49 IST)
புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தான் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 20 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நேற்று பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. 
 
இந்நிலையில், இன்று பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்த போது சுதாரித்துக்கொண்ட இந்திய விமானப்படையில் உடனடி தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் திட்டத்தை முறியடித்தனர். இதில் விமானி ஒருவர் பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இருநாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்து வரும் பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமெட் அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி மேலும் சர்ச்சையையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது. 
அவர் கூறியதாவது, பாகிஸ்தானில் முழுமையாக போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. போருக்கான மனநிலையில்தான் நாம் இருக்கிறோம். ஏற்கனவே அவசர கால நிலைக்கான சட்டங்களை பிறப்பித்து அதைப் பின்பற்றி வருகிறோம். 
 
இந்தியாவுடன் ஒருவேளை போர் ஏற்பட்டால், அது 2 ஆம் உலகப்போரை காட்டிலும் மோசமானதாக, பெரிதாக அமையும். அந்த போர் மிகப் பயங்கரமானதாக இருக்கும். இதற்கு பாகிஸ்தான் தயாராகவும் உள்ளது. 
 
ஆதலால், அடுத்துவரும் 72 மணி நேரம் (3 நாட்கள்) மிக முக்கியமானவை. இப்போதுள்ள சூழல் அடுத்துவரும் நாட்களில் போராக மாறலாம், அல்லது அமைதிக்கும் திரும்பலாம் என பேசியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :