1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Orange alert for Delhi

தொடரும் கனமழை - டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட்!

டெல்லி
டெல்லியில் 3வது நாளாக தொடரும் கனமழை 4 ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் வீடுகள் மற்றும் கடைகளில் வெள்ள நீர் புகுந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் டெல்லியில் 3வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் 4 ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியதுடன் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. 
 
டெல்லியில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்துள்ளதாக மழை பதிவு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் 112.1 மிமீ மழை பெய்திருப்பதாகவும், இதற்கு முன்பு 2002ல் செப்டம்பர் 13 ஆம் தேதி 126.8 மி.மீ மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash