1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (21:03 IST)

நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தது ஏன்? வெளியான தகவல்

vijay
நடிகர் விஜய்  ‘மக்கள் இயக்க’ நிர்வாகிகளை  இன்று  சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார்.

அதன்படி,  இன்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் செய்திருந்த நிலையில், மதியம் நடிகர் விஜய் அலுவலகத்திற்கு வந்தார்.

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள்  தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 300 பேர்  இந்த ஆலோசனை  கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியானது.

இந்த ஆலோசனை கூட்டதில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பழனிகுமார் என்ற நிர்வாகி செய்தியாளரிடம் கூறியதாவது: ‘’ சமீபத்தில் கல்வி விழாவுக்கு  ஏற்பாடு செய்து மாணவ, மாணவிகளை அழைத்து வந்தது நல்லபடியாக விழா நடைபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று எங்களை வரவழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது ‘’என்று கூறினார்.

இன்னொரு நிர்வாகி,   ‘’அன்று நடைபெற்ற கல்வி விழா முடிவடைய இரவு 11 மணி ஆகிவிட்டதால்,  நடிகர் விஜய்யால் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்திக்க முடியவில்லை என்று வருந்தியதாகவும் அதனால், கல்வி விழாவுக்கு ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தப்பட்ட நிலையில், இதற்கு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் வேண்டி, இன்று விஜய் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும் , இதன் மூலம் மேலும் தங்கள் இயக்க பணிகளை தீவிரமாகச் செய்ய உற்சாகமும், ஆர்வமும் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், மக்கள் இயக்கப் பணிகள் எப்படி நடந்து வருகிறது என்பது பற்றி அனைவரிடம் விஜய் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.