1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2023 (07:38 IST)

பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.. யார் யார் பங்கேற்பு..!

பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் யார் யார் பங்கேற்க வந்துள்ளனர் என்பதை குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
 
2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூடிய நிலையில் தற்போது பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடியுள்ளனர். 
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனை கார்கே, பீகார் முதல்வர் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகபூபா முக்தி முஃப்தி, உமர் அப்துல்லா உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்
 
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva