1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Only PM Modi can give development Minister Amit Shah

பிரதமர் மோடி மட்டுமே வளர்ச்சியைக் கொடுக்க முடியும் - அமைச்சர் அமித்ஷா

Amitshah
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த தேர்தலில் தெலங்கானா முதல்வராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த தேர்தலில் தெலங்கானா முதல்வராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாரத ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளாலும் தெலங்கானாவில் வளர்ச்சியைக் கொடுக்க முடியாது.  பிரதமர் மோடி மட்டுமே வளர்ச்சியைக் கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
About Writer
Sinoj