காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும், பெட் கட்டி சவால் விடுகிறேன்: ராகுல் காந்தி
மணிப்பூரில் காங்கிரஸ் தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று இதனை பெட் கட்டி சவால் விட கூட நான் தயாராக இருக்கிறேன் என்றும் ராகுல் காந்தி சவால் விட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் மிசோராமில் தேர்தல் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியைப் பிடிக்கும், பெட் கட்டி நான் இதை சவால் விடவும் தயார்.
வடகிழக்கு மக்களின் மொழி கலாச்சாரம் ஆகியவற்றை அழிக்கும் நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. மணிப்பூர் மாடல்தான் ஆர்எஸ்எஸ் மாடல் என்றும் அவர் கூறினார்
Edited by Mahendran