1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2023 (20:15 IST)

காங்கிரஸ் கமிட்டி முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் திரு அப்துல் கனி ராஜா நடத்துகின்ற கூட்டத்தில் பங்கேற்கவோ, அவருடன் கட்சி சம்பந்தமாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவோ கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்திரு எஸ். அப்துல் கனி ராஜா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் 
தற்காலிகமாக காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.
 
தற்போது திரு அப்துல் கனி ராஜா அவர்கள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம் 26.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அந்த கூட்டம் கூட்டுவதற்கு தார்மீக அடிப்படையில் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்த கூட்டம் காங்கிரஸ் கட்சி விதிமுறைகளுக்கு முரணாக கூட்டப்படுகின்ற கூட்டம். இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும் பங்கேற்கக்கூடாது. அப்படி கூட்டத்தில் பங்கேற்றால் அது கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்படும்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் இறுதி  முடிவிற்கு பிறகே திரு அப்துல் கனி ராஜா மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். எனவே திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் திரு அப்துல் கனி ராஜா நடத்துகின்ற கூட்டத்தில் பங்கேற்கவோ, அவருடன் கட்சி சம்பந்தமாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவோ கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்துகிறது.