திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (08:44 IST)

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் 10ல் ஒருவருக்கு மட்டுமே மெடிக்கல் சீட்!

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பத்தில் ஒருவருக்கு மட்டுமே மெடிக்கல் சீட் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு 85,025 மருத்துவ படிப்புக்கான இடங்கள் காலியாக இருந்த நிலையில் அந்த ஆண்டு 7 லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்றனர் 
 
அதேபோல் கடந்த ஆண்டில் 89 ஆயிரத்து 875 மெடிக்கல் சீட்டுகள் இருந்த நிலையில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர் 
 
எனவே இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பத்தில் ஒருவருக்கு மட்டுமே மெடிக்கல் சீட் கிடைக்கும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது