1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (18:11 IST)

தமிழில் எத்தனை மதிப்பெண் எடுக்கனும்? டிஎன்பிஎஸ்சி புது அறிவிப்பு

குரூப் 4 தேர்வில் தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என அறிவிப்பு. 

 
குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு  காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். நாளை முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழ் மொழியில் 100 கேள்விகள், பொது அறிவில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 150 + 150 என 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.