புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (09:37 IST)

5 நாட்கள்தான் அவகாசம்..! ஆதாரை இலவசமாக புதுப்பிப்பது எப்படி? - எளிமையான வழிமுறை!

10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள ஆதார் கார்டை புதுப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இலவசமாக எப்படி புதுப்பிப்பது என பார்க்கலாம்.

 

 

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடையே ஆதார் அடையாள அட்டை புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதுடன், இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 

ஆதார் மையங்கள் மூலமாகவோம், இ-சேவை மையங்கள் மூலமாகவோ ஆதாரை புதுப்பிக்கலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாகவும் ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

 
  • உங்கள் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த எண்ணிற்கு OTP வரும். அதை பயன்படுத்தி லாக் இன் செய்ய முடியும்.
  • பின்னர் உங்கள் ஆதார் சுயவிவர குறிப்பில் உள்ள தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்த பின்னர் ’தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளது’ என்று க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் அடையாள, முகவரி சான்றை 2MB அளவில் JPEG, PDF அல்லது PNG ஃபார்மெட்டில் அப்லோட் செய்து Submit கொடுக்க வேண்டும்.
  • அடையாள முகவரி சான்றாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பேன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள ஆவணத்தையும் பயன்படுத்தலாம். 
  • முழுவதும் சமர்பித்த பிறகு ஆதார் புதுப்பித்தல் செயல்பாடு நிறைவடைந்ததாக ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு மெசேஜ் வரும். அதன் மூலம் ஆதார் புதுப்பிக்கப்பட்டதை உறுதி செய்துக் கொள்ளலாம்.
 

Edit by Prasanth.K