ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (09:01 IST)

என்னை பார்க்க வருபவர்கள் ஆதார் அட்டையுடன் வரவும்: கங்கனா ரனாவத்

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ள நடிகை கங்கனா ரனாவத்  தன்னை பார்க்க வருபவர்கள் ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என நிபந்தனை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மண்டி என்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத்  போட்டியிட்டார் என்பதும் அவர் அபார வெற்றி பெற்று எம்பியாக பதவி ஏற்று கொண்டார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் என்னை காண வரும் பொதுமக்கள், தொகுதி மக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என்றும் தனது தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கங்கனா ரனாவத்  நிபந்தனை விதித்துள்ளார்.

மேலும் தன்னை சந்திப்பதற்கான காரணத்தை பேப்பரில் எழுதி கொடுத்து கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும்  எனது தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்றும் அவர் அறிவித்துள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இது போன்ற நிபந்தனை விதித்ததில்லை என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.



Edited by Siva