ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (07:42 IST)

ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு..! உடனே இந்த வேலையை பாருங்க..!

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி இருக்கும் நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை இன்னும் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க வில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் மோசடி செய்வதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் உங்கள் பெயர் முகவரி புகைப்படம் ஆகியவற்றை புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆதார் சேவை மையம் அல்லது இணையதளம் மூலம் கட்டணம் இல்லாமல் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் இணையதளத்திற்கு சென்று புதுப்பிக்க வேண்டும் என்ற விருப்பத்தை கிளிக் செய்து பெயர் அல்லது குடும்பப் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் ஆகியவற்றை செய்து கொள்ளலாம் என்றும் அவை 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்டு புதிய ஆதார் அட்டை பெறுவீர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வில்லை என்றால் கட்டணம் செலுத்தி தான் புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva