வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (21:48 IST)

மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ விலகல்: அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க விரும்பியது. ஆனால் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவதால் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
 ஏற்கனவே கடந்த மாதம் 29ஆம் தேதி மான்சா தொகுதி எம்.எல்.ஏ நாசர்சிங் ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நிலையில் இன்று பஞ்சாப் மாநிலம் ரூபாநகர் தொகுதி எம்.எல்.ஏ அமர்ஜித்சிங் சந்தோ என்பவர் ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏக்கள் இருவர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது
 
 ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அமர்ஜித் சிங் சந்தோ கூறியபோது, 'ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி மிகுந்த அடக்குமுறை உணர்வுடன் செயல்படுகிறது. மக்களை நோக்கிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியால் அக்கட்சியில் இணைந்துள்ளேன் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் மர்ஜித் சிங் சந்தோவின் வருகையை வரவேற்றுள்ள அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியின் பலம் மேலும் வலுவடைந்துள்ளது கூறியுள்ளார்.