திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (18:52 IST)

முதல்வரின் கன்னத்தில் அறைந்த மர்ம நபர்: பெரும் பரபரப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மர்மநபர் ஒருவர் அவருடைய கன்னத்தில் அறைந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது
 
டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளுக்கும் வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என டெல்லியில் மும்முனை போட்டி நடைபெறுகிறது
 
இந்த நிலையில் டெல்லியில் திறந்த வாகனத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரை செய்தபோது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, திடீரென கூட்டத்தில் இருந்த வந்த மர்ம நபர் ஒருவர் பாய்ந்து வந்து அவரது கன்னத்தில் அறைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். முதல்வரை அடித்த அந்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.