பாஜக பக்கம் சாயும் திமுக...? வெற்றி முனைப்பில் தினகரன்
திமுக பாஜகவின் பி டீம் என்றும், தேவை பட்டால் திமுக பாஜகவுடன் இணைந்துவிடும் என தினகரன் விமர்சித்துள்ளார்.
நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில் டிடிவி தினகரன் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சாகுல் அமீதை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
அப்போது அவர் பேசியது பின்வருமாறு, இந்த தேர்தலோடு தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் அடகு வைத்த பழனிச்சாமி, பன்னீர்செல்வம் கம்பெனிக்கு முடிவு கட்ட வேண்டும். பாஜகவின் ஏ டீம் அதிமுக. பி டீம் திமுக.
தேவை இருந்தால் திமுக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் சேர்ந்துவிடும். திமுக ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்கிறது. திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறது.
என்னை அழிக்க நினைத்தாலும், சிறையில் தள்ளினாலும் 20 ஆண்டுகள் கழித்து வந்து பாஜகவை எதிர்ப்பேன். என் வாழ்நாளில் எந்த ஒரு காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. நான் பதவிக்கு ஆசைப்படாதவன். அடுத்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர்கள் நாங்கள் என பேசி பிரச்சாரம் செய்தார்.