வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (08:34 IST)

மீண்டும் காக்கை டுவீட்: தொடரும் கிரண்பேடியின் கிண்டல்!

புதுவை ஆளுனர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு இருந்து கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் ஆளுனரை எதிர்த்து முதல்வர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஒருவாரம் நடந்த இந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு காக்கா படத்தை பதிவு செய்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கவர்னர் நிறவெறியுடன் நடந்து கொள்வதாகவும் விமர்சனம் செய்தனர்

இந்த நிலையில் புதுச்சேரி கவர்னர் தனது டுவிட்டர் கணக்கில் மீண்டும் காக்கை படத்தை பதிவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் 2 காக்கைகள் ஜோடியாகவும், ஒரு காக்கை தனியாக இருப்பது போன்றும் அவர் ஒரு படத்தை பதிவு செய்துள்ளார். இந்த படம் இயற்கையை குறிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும் இந்த பதிவுக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன