1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Omicron spread in India reaches 4,000

நாட்டில் 4,033 ஆக எகிறிய ஒமிக்ரான் தொற்று - அச்சத்தில் மக்கள்!

இந்தியா
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 4,000 ஆக பதிவாகியுள்ளது. 
 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,216 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தானில் 529 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், கேரளாவில்  333 பேருக்கும் குஜராத்தில்  236 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அதோடு ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 1,552 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிட்த்தக்கது. 
About Writer
Sugapriya Prakash