1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Omicron cases in India increases

நாட்டில் 4,868 ஆக எகிறிய ஒமிக்ரான் தொற்று - அச்சத்தில் மக்கள்!

ஒமிக்ரான்
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 4,868 ஆக பதிவாகியுள்ளது. 
 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 4,868 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. ஒமிக்ரான் தொற்றில் இருந்து 1,805 பேர் குணமடைந்த நிலையில் 3,063 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா - 1,281, ராஜஸ்தான் - 645, டெல்லி - 546, கர்நாடகா - 479, கேரளா - 350 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
About Writer
Sugapriya Prakash