வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2023 (12:53 IST)

நாளையுடன் முடிவடைகிறது கெடு.. 87 சதவீத ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக தகவல்..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த நிலையில்,  2000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதாவது   ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீட்டித்து, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில்  2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு நாளையுடன் கெடு முடிவடைவதால் நாளை மாலைக்குள் வங்கிகளுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் கையில் 2000 ரூபாய் நோட்டு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இதுவரை 87 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு டெபாசிட்களாக திரும்ப வந்துள்ளன என்றும் 12000 கோடி மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப பெற வேண்டியது உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  
 
Edited by Siva