திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (10:00 IST)

விஜய்யை இளமையாகக் காட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யும் தளபதி 68 படக்குழு!

பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. மகனாக நடிக்கும் விஜய்யை இளமையாக காட்ட வி எப் எக்ஸ் மூலம் பல ஷாட்களை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காகதான் விஜய் அமெரிக்காவுக்கு சென்று ஹாலிவுட் ஸ்டுடியோ ஒன்றில் தன் உடலை ஸ்கேன் செய்துகொண்ட பணிகள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.