திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (10:40 IST)

ரெப்போ விகிதத்தில் மாற்றமா? ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு

repo
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்றும் தற்போதைய வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின்  ஆளுநர்   சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் உலகின் வளர்ச்சி என்ஜின் ஆக உருவாக இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்,

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை ரெப்போ விகிதத்தை சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதாவது 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. 2022ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ரெப்போ விகிதம் 4.5 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது 6.5 என உயர்ந்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததால் ஹோம் லோன், வாகன கடன் வாங்குவோருக்கு சுமை அதிகரித்தது. இந்த நிலையில் இன்று நடக்கும் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் தொடர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran