வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2023 (11:02 IST)

2025 ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும்: சக்திகாந்த தாஸ்

2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.6  சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார் 
 
இந்திய உற்பத்தி வளர்ச்சி பாதையில் இருப்பதாகவும், சேவை துறை  தடுமாற்றத்தில் இருப்பதாகவும் அவர் இன்று நடந்த  இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் பேசினார்.
 
செப்டம்பர் மாதம் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறையும்  என்று கூறிய சக்தி காந்த தாஸ், 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எவ்விதமான மாற்றமும்  இல்லாமல் 6.5 சதவீதமாக இருக்கும் என்றார். மேலும் 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்க அளவுக்கு 5.4 சதவீதமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 
 
2024 ஆம் நிதியாண்டில் 2வது காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 3வது காலாண்டில்  5.6 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 5.2 சதவீதமாகவும், 2025 ஆம்  நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.2  சதவீதமாக இருக்கும் என நிதி வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
 
மேலும் இந்தியாவில் பணவீக்கம் உணவு பொருட்களின் விலை உயர்வால் அதிகரித்துள்ளது என்றும், காய்கறி விலை உயர்வு 3வது மாதமாக நாட்டின் CPI எனப்படும் சில்லறை  பணவீக்கத்தை பாதித்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
 
ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு செப்டம்பர் 29 ஆம் தேதி முடிவில் 586.9  பில்லியன் டாலராக உள்ளது  என்றும், இந்திய வங்கித்துறை உறுதியாக உள்ளது என்றும், NBFC துறைகளின் இன்டிகேட்டர்களும்  வலிமையாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
 
Edited by Siva