1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (09:46 IST)

ஒரு இந்தியர் கொல்லப்பட்டால் மூன்று எதிரிகளை கொல்ல வேண்டும்: முதல்வர் ஆவேசம்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வாn பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆவேசமாக மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும் சீனா தரப்பிலும் 35 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் சீனாவின் அத்துமீறி தாக்குதலால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதால் இந்தியர்கள் அனைவரும் பெரும் ஆவேசத்தில் உள்ளனர். சமூகவலைதளத்தில் சீனாவின் செயலிகளை பயன்படுத்த கூடாது என்றும் சீன பொருட்களை இனிமேல் இறக்குமதி செய்யக்கூடாது என்றும் கோஷங்கள் முழங்கபட்டு வருகிறது.  அதுமட்டுமின்றி சீன நிறுவனத்திற்கு தரப்பட்டிருந்த 470 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே பணி ஒன்றை ரயில்வே துறை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டால் எதிரிப் படையைச் சேர்ந்த மூவரை கொல்லுமாறு ஒவ்வொரு ராணுவ வீரருக்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஒரு அரசியல்வாதியாக பேசவில்லை என்றும் முன்னாள் ராணுவத்தினர் என்ற அடிப்படையில் பேசுவதாகவும் இந்திய ராணுவம் மீது தனது மிகுந்த அன்பு உண்டு என்றும் இந்திய ராணுவம் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்’ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்