ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (09:50 IST)

இந்தியா மீது சைபர் தாக்குதல் தொடுக்க சீனா திட்டம்?

இந்தியா – சீனா இடையேயான மோதலுக்கு பிறகு இந்தியா மீது சீனா சைபர் தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லடாக் எல்லைப்பகுதியில் சீனா – இந்தியா இராணுவத்தினருக்கு இடையே மோதல் எழுந்தது. இந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 34 வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் இந்தியர்கள் பலர் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக் கொள்ளப்பட்டாலும், சீனா இந்தியா மீது மறைமுகமாக சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் வலைதளங்கள் அல்லது அதிக பண புழக்கம் நடைபெறும் ஏடிஎம் சர்வர்களை ஹேக்கர்கள் மூலம் நிலைகுலைத்து புதிய பிரச்சினைகளி உருவாக்க அவர்கள் முயலலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற இந்தியர்களின் மனநிலைக்கு எதிராக சீனா இந்த பொருளாதார சைபர் தாக்குதலுக்கு திட்டமிடுகிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.