1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 ஜனவரி 2022 (21:43 IST)

இதை செய்தால் ரயில்வே துறையில் வேலை கிடைக்காது: எச்சரிக்கை அறிவிப்பு

ரயில் மறியல் செய்து போராட்டம் நடத்தினால் ரயில்வே துறையில் வேலை பார்க்க முடியாது என ரயில்வே துறை எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
 
தமிழகத்தில் கூட அவ்வப்போது ரயில் மறியல் போராட்டம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரயில்வே துறை சற்றுமுன் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் ரயில்வே பாதைகளில் போராட்டம் நடத்தினால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது