புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (08:54 IST)

ரயில் நிலையங்களில் கார் சார்ஜிங் நிலையம்! – மத்திய அரசு திட்டம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க அரசு முயற்சித்து வரும் நிலையில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்க 2030ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் குறைவாக உள்ளதால் அதன் பயன்பாடும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையத்தை அமைப்பது குறித்து ரெயில்வே துறைக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது மின்சார வாகன பயன்பாட்டை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 22 முக்கிய ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.