இனி ஒரு ட்ரோன் கூட இங்க பறக்கக் கூடாது! – சவுதி விதித்த புதிய தடை!
சவுதி விமான நிலையம் மீது நடந்த தாக்குதலை தொடர்ந்து ட்ரோன்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், ஏமன் அரசுக்கு கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் சவுதி அரேபியா கூட்டு படைகள் ஏமனுக்கு உதவுவது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சவுதியை அச்சுறுத்தும் வகையில் சமீபத்தில் சவுதியின் விமான நிலையம் உள்ளிட்ட 2 பகுதிகளில் ட்ரோன் வழியாக குண்டு வீசி வெடிக்க செய்தனர்.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் பதிலடி தரும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பதுங்கியுள்ள பகுதிகளில் சவுதி வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ட்ரோன் தாக்குதல் காரணமாக இனி எந்த நிகழ்வுகளுக்காகவும் சவுதியில் ட்ரோன் பயன்படுத்தக் கூடாது என்றும் சவுதி தடை விதித்துள்ளது.