திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (13:36 IST)

தரமற்ற உணவு; பயண வழி உணவகத்திற்கு தடை! – போக்குவரத்துத்துறை அதிரடி!

மாமண்டூரில் செயல்பட்டு வந்த பயண வழி கேண்டீனில் தரமற்ற உணவு அளித்ததால் அந்த உணவகம் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பேருந்துகள் வழியாக நெடுந்தூரம் பயணிப்பவர்கள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினை பயண வழி கேண்டீன்கள். பயண வழி கேண்டீன் உணவகங்கள் பலவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாமண்டூர் பயண வழி உணவகத்தின் மீதும் தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில் அந்த உணவகம் செயல்பட போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது. அரசு பேருந்துகள் இனி அவ்வுணவகத்தில் நிற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் புதிய தரமான உணவகத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.