புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 ஜூலை 2021 (11:27 IST)

இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் இல்லை: மத்திய அரசு

கொரோனா வைரஸ் முதல் அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பல உயிரிழப்புகள் நேர்ந்த நிலையில் தற்போது இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறினார் 
அதே நேரத்தில் முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் பாதிப்பில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும் அந்தத் தேவையை இந்திய அரசு சமாளித்து உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்தார்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் எனவே ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்