ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ரேசன் கார்டுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை ஜூலை 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று கால அவகாசம் அளித்து இருந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அவர்கள் செப்டம்பர் 30 வரை ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் 
 
இதுவரை 92.7 சதவீத ரேஷன் கார்டுகளில் ஆதார் அட்டையுடன் இணைக்கபட்டுள்ளன என்றும் மீதி உள்ளவர்கள் இணைப்பதற்காக மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த கால அவகாசத்திற்குள் அவர்கள் அனைவரும் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
எனவே செப்டம்பர் 30 போல் இதுவரை ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்