விக்ரம் , ஐஸ்வர்யா ராய் நடித்த காட்சிகள் ஷூட்டிங்!

மீண்டும் பிரசாந்துடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்?
Sinoj| Last Modified புதன், 21 ஜூலை 2021 (00:00 IST)

இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் வருடம் பொன்னியிப்ன் செல்வன். இப்படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற காலத்தினால் அழியாத புகழ்பெற்ற நாவலை திரைப்படமாக்க முயற்சியில் மணிரத்தினம் ஈடுபட்டு வருகிறார் என்பதும் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது.

நீண்ட நாட்லகள் கழித்து இப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளதால், இந்த போஸ்டர் மிக அபாரமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். . இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது
.
இந்நிலையில், இன்று பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :