வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (10:29 IST)

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? சக்திகாந்ததாஸ் தகவல்..!

repo
ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்பட்டு வருகிறது என்பதும் ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் காரணமாக லோன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம் ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 6.5% என்று இருக்கும் நிலையில் அதே விகிதம் தொடரும் என சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். 
 
நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் ரிப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran