வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (16:01 IST)

மேற்கு வங்கத்தை தொடர்ந்து பஞ்சாப்பிலும் காங்கிரசுக்கு பின்னடைவு.! கூட்டணி இல்லை.. ஆம் ஆத்மி அறிவிப்பு..!

arvind kejriwal
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஆனால் அந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
 
mamtha
இதனிடையே மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியும் அறிவித்துள்ளது. 

 
மொத்தம் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தை தொடர்ந்து பஞ்சாபிலும், இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.