திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (13:16 IST)

திமுகவால் ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை.. காங்கிரஸ் பிரமுகர் பேச்சால் பரபரப்பு..!

dmk congress
திமுகவால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்லை என்றும் ஆனால் திமுக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் பிரமுகர்  அஜோய் குமார் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசனை நடந்த நிலையில் இதில் அஜோய் குமார் , கே.எஸ் அழகிரி மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிக சீட்டுகள் கேட்டு பெற வேண்டும் என்றும்  கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 60 தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும் அதை சுட்டிக் காட்டி அதையே தொகுதிகள் பெறப்படும் என்றும் அஜோய்குமார் தெரிவித்தார்

மேலும்  காங்கிரஸ் கட்சி தொண்டர்களையே திமுக போலீஸ் சிறையில் வைக்கிறது என்றும் மோடிக்கு கருப்பு கொடி காட்டினால் திமுகவுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கூறினார். இருப்பினும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என முதன் முதலில்  திமுக தான் சொன்னது என்பதற்காக அந்த கட்சியிடம்  சமூகமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மொத்தத்தில் இந்த முறை திமுகவிடம் அதிக சீட்டுகள் பெற வேண்டும் என காங்கிரஸ் எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு நான்கு அல்லது ஐந்து சீட்டுகள் மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran