செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (11:01 IST)

ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு.! காங்கிரஸ் -கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு

governor ravi
குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
 
குடியரசு தின விழா வருகிற 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆளுநர் மாளிகை சார்பாக தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
 
ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகிறார். திருவள்ளுவர் தினத்தன்று, காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆர்.என் ரவி வாழ்த்து தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. 

 
ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என்று ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது