1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (15:18 IST)

புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தல்..! காரில் கடத்திய பெண் கைது..!!

liquor arrest
புதுச்சேரியில் இருந்து காரில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கடத்திய பெண் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
 
கடலூர் மாவட்ட கலால் துறை போலீசார் அண்ணா பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்பொழுது காரில் சந்தேகத்திற்கு இடமாக வந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
 
காரில்  12 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட தியாகதுருகம் பகுதியை சார்ந்த விஜயா என்பவரை கலால் துறை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

 
விசாரணையில், புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதிக்கு மது கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பெண் மீது ஏற்கனவே மது கடத்தல் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.