வியாழன், 18 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2025 (16:46 IST)

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?
பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் இன்று பத்தாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய என்.டி.ஏ. தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
 
10வது முறையாக முதல்வர் பதவியேற்றுள்ள நிதீஷ் குமாருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையாத சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.64 கோடி ஆகும். அவரிடம் ரொக்கமாக ரூ.21,052 மற்றும் வங்கியில் ரூ.60,811 உள்ளது. டெல்லியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு, ரூ.11.32 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார், ரூ.1.45 லட்சம் மதிப்பிலான 13 பசுக்கள் மற்றும் கன்றுகள் இவருக்கு சொந்தமாக உள்ளன.
 
40 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட நிதீஷ் குமாரின் சொத்து மதிப்பு வெறும் ரூ.1.64 கோடி என்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
Edited by Mahendran